தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக வாட்டர்பெல் அடிக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முறையாக தண்ணீர் குடிப்பதற்காக வாட்டர் பெல் அடிக்கப்படும் முறை கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இதேபோல், புதுச்சேரியிலும் வரும் 25ஆம் தேதி முதல் பள்ளிகளில் வாட்டல் பெல் அடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக 3 அல்லது 4 முறை வாட்டர் பெல் அடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்புகளை காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Newstm.in