ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயசுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயசு, மகனின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராபர்ட் பயசுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. மேலும், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது, அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
Newstm.in