அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2019 02:25 pm
chance-for-rain-for-the-next-2-days-weather-center

அடுத்த 2 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 7 செ.மீ., சீர்காழி, காயல்பட்டினத்தில் 6 செ.மீ., நிலக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 5 செ.மீ., சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கத்தில் தலா 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close