விருப்பமனு கட்டணத்தை திரும்பபெறலாம்: திமுக அறிவிப்பு

  அனிதா   | Last Modified : 22 Nov, 2019 09:07 am
optional-petition-fees-can-be-withdrawn-dmk

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டணத்தை திரும்பபெறலாம் என திமுக அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் விநியோகம் செய்தது. இந்நிலையில், மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, நேரடி தேர்தல் நடைபெறாமல், மறைமுக தேர்தல் நடைபெற இருப்பதால், மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை திரும்பப் பெறலாம்  என திமுக அறிவித்துள்ளது. மேலும், ரசீதை கொடுத்து நவ.28 முதல் 30ஆம் தேதி வரை மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close