இன்று உதயமாகிறது தென்காசி!

  அனிதா   | Last Modified : 22 Nov, 2019 10:11 am
tenkasi-rises-today

தமிழ்நாட்டின் புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்து,  5,000 பயனாளிகளுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close