தமிழக பாலில் நச்சுத்தன்மை அதிகம்: மத்திய அமைச்சர் தகவல்

  அனிதா   | Last Modified : 22 Nov, 2019 01:33 pm
toxicity-is-high-in-tamil-nadu-milk-union-minister

தமிழக பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த நவ.18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் பால் விவகாரம் தொடர்பாக ம்.பி. டிஆர். பாலு கேள்வி எழுப்பினார். அப்போது, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாகவும், தமிழகத்தில் 551 பால் மாதிகளை சோதனை செய்ததில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதிலளித்தார். மேலும், தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் அஃப்லாடாக்சின் எம்1 என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close