தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 03:48 pm
the-chance-of-heavy-rains-in-southern-districts

காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

பருவமழை கால கட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதகபோக்கு, காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close