ஓபிஎஸ்சை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை: ஆடிட்டர் குருமூர்த்தி

  அனிதா   | Last Modified : 25 Nov, 2019 10:31 am
not-personally-critical-of-ops-auditor-gurumurthy

ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார். 

திருச்சியில் நேற்று நடைபெற்ற துக்ளக் நிகழ்ச்சியில் பேசிய அவர், நீங்கள் எல்லாம்  ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டதாக கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில், "ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்றும் அதிமுகவினர் ஏன் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் கேட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தோரில் எனக்கு ஓபிஎஸ் மேல்தான் அதிக மரியாதை. முன்னும், பின்னும் என்ன கூறினேன் என்பதை குறிப்பிடாமல் திரித்து பரப்புவது கண்ணியமல்ல என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close