அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை 

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2019 02:47 pm
chance-for-rain-for-the-next-2-days-warning-to-fishermen

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close