உள்ளாட்சி தேர்தல்: நாளை அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை 

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 10:53 am
local-election-consulting-with-all-parties-tomorrow

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதையொட்டி, அனைத்து கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருப்பமனுக்கள் பெறப்பட்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close