5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 11:50 am
5-8th-class-public-examination-will-be-held-minister-sengottaiyan

5,8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் பொதுத்தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை கல்வி அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே பள்ளிக்கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும் என கூறினார். அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், 5க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 5,8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் பொதுத்தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close