4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2019 01:34 pm
heavy-rain-in-4-districts-weather-center

வெப்பசலனம் காரணமாக கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கும், கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 செ.மீ., புதுச்சேரியில் 4 செ.மீ., கேளம்பாக்கம், மண்டபத்தில் 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close