பூசன தீவனங்களை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 02:42 pm
avoid-fungi-feed-minister-udumalai-radhakrishnan

பூசனம் படர்ந்த தீவனங்கள் கால்நடைகளுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், " பசு தீவனங்களில் பூசனம் உள்ளதாக என கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தீவனங்களில் பூசனம் படந்திருக்கிறதா என்பதை விவசாயிகளும் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பூசனம் படர்ந்த தீவனங்களை தவிர்க்க வேண்டும் என கூறினார். பிராய்லர் கோழிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அது போன்ற புகார்கள் எதுவும் எனக்கு வரவில்லை என தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close