கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்த செய்யப்பட்ட தேர்வுகள் டிச.3ஆம் தேதி நடைபெறும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
Newstm.in