ப.சிதம்பரம் ஜாமீன் மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு

  அனிதா   | Last Modified : 28 Nov, 2019 01:21 pm
p-chidambaram-bail-plea-adjournment-of-judgment

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாட்சிகளை கலைக்க முற்பட்டார், மிரட்டினார் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close