36வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை!

  அனிதா   | Last Modified : 28 Nov, 2019 01:39 pm
ranipet-becomes-the-36th-district

தமிழகத்தின் 36வது மாவட்டமாக உதயமான ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிர்வாகப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை தமிழகத்தின் 36வது மாவட்டமாக உதயமானது. ராணிப்பேட்டையில் உள்ள நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மாவட்ட நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

36வது மாவட்டமாக உருவாகியுள்ள ராணிப்பேட்டை, ஒரு மக்களவை தொகுதியையும் (அரக்கோணம்), 4 பேரவை தொகுதிகளையும் (ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம்), 5 நகராட்சிகளையும், 9 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய் கோட்டங்களும், வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், நெமிலி ஆகிய 4 தாலுக்காக்களும் இடம்பெற்றுள்ளன. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close