சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2019 09:08 am
holidays-only-for-schools-in-7-districts-including-chennai

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் போரூட், ராமாபுரம், வளரசவாக்கம், வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.

இதேபோல், நாகை மாவட்டம்  வேதாரண்யம், கோடியக்கரை, தேத்தாகுடி, வாய்மேடு, செம்போடை, ஆயக்காரன்புலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூரிலும் விடிய விடிய மழையும் பெய்தது.

இந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, திருவாரூர் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close