காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 ஏரிகள் நிரம்பின: பொதுப்பணித்துறை

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2019 11:34 am
75-lakes-in-kanchipuram-district-filled-public-works-department

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 75 ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக மழை தீவிரமாக பெய்கிறது.

இந்த நிலையில், நள்ளிரவு முதல் விடிய விடிய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தொடர் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 ஏரிகள் நிரம்பியுள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ‘தொடர்ந்து பெய்து வரும் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நத்தம்பேட்டை, வையாவூர், குன்னவாக்கம், வளந்தோட்டம் உள்ளிட்ட  75 ஏரிகள் நிரம்பியுள்ளன. 147 ஏரிகள் 75% முதல் 100%, 143 ஏரிகள் 50% முதல் 75%, 293 ஏரிகள் 25% முதல் 50% வரையும் நிரம்பியுள்ளன. 246 ஏரிகள் 25% குறைவாக தண்ணீர் நிரம்பியுள்ளன’ என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close