தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு;'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை : வானிலை மையம் தகவல் 

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2019 01:56 pm
heavy-rains-likely-in-tamil-nadu-for-the-next-2-days

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், ‘வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதனமானது முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 40இல் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக தலைஞாயிறில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். லட்சத்தீவு பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடலூர் முதல் திருநெல்வேலி வரை, 10 மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்வதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம், சென்னையிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close