சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்க முடியாது: பொன்.மாணிக்கவேல் கடிதம்!!

  அபிநயா   | Last Modified : 30 Nov, 2019 05:33 pm
pon-manickavel-against-tn-government-order

சென்னை: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு தன்னை விடுவிக்க முடியாது என்ற பொன்.மாணிக்கவேல் தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சம்பந்தபட்ட ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏஜிபியிடம் ஒப்படைக்குமாறு  சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தால் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட மாணிக்கவேலின் பதிவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதை நீடிக்க முடியாது என்றும் மறுப்பு தெரிவித்திருக்கிறது தமிழக அரசு.

இதை தொடர்ந்து, தமிழக அரசின் இந்த உத்தரவினால் அதிருப்தியடைந்த  பொன்.மாணிக்கவேல், உயர்நீதிமன்றம் தான் தம்மை நியமித்ததாகவும், அதனால் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் தம்மிடமுள்ள வழக்கு விசாரணை ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close