ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்வு...சென்னையில் மீண்டும் கனமழை...! 

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 08:45 am
100-million-cubic-feet-of-water-in-one-day-sembarambakkam-lake

மழை காரணமாக சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரேநாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்தது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தற்போதும் சென்னையில் சைதாப்பேட்டை, மாம்பலம், போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், ஆதம்பாக்கத்திலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649 மில்லியன் கன அடியிலிருந்து749 மில்லியன் கனஅடியாக உயர்ந்தது. ஒரேநாளில் ஒரேநாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. மழை காரணமாக ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close