குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் குளிப்பதற்கு தடை 

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 09:00 am
courtallam-tirparappu-forbidden-to-bathe-in-waterfalls

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறப்பாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தென்காசியில் பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close