டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இப்படி தான் இருப்பாங்களாம்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 11:42 am
those-who-were-born-in-december-are-like-this

டிசம்பர் மாதம் பிறந்துவிட்டது. வருடத்தின் கடைசி மாதம் என்பதால், அந்த மாதத்தை மறக்கவே முடியாத மாதமாக டிசம்பர் நம் வாழ்க்கையில் வருடந்தோறும் இருந்து விடுகிறது. அதற்கு காரணம், அடுத்த மாதம் முதல் புதிய வருடம் பிறக்கப்போகிறது. அதற்கு முன்பாக,  நாம் என்னவெல்லாம் சாதித்தோம், இழந்தோம், செய்ய தவறினோம், மறந்தோம், நினைத்ததை செய்தோமா என்று அனைத்தையும் எண்ணிப்பார்ப்போம் டிசம்பர் மாதத்தில். மற்ற மாதங்களில் பிறந்தவர்களே இந்த மாதத்தில் இப்படியெல்லாம் செய்கையில், அந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம்.

திறமை, அறிவு

மற்ற மாதத்தில் பிறந்தவர்களைவிட டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும், அறிவார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை உடனே புரிந்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு, 10 பேருக்கு மத்தியில், ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக கூறினால், சொல்லிக்கொடுத்தால் அதில் முதல் ஆளாக புரிந்துகொள்பவர்கள் இவர்களாகதான் இருப்பார்கள். அதுவும் விரைவில். சமயோசித்த புத்தி படைத்தவர்களாகவும் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.

போராட்ட குணம் கொண்டவர்கள்

டிசம்பரில் பிறந்தவர்கள் பொதுவாக போராட்டம் குணம் கொண்டவர்கள். அவர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், அந்த தொழிலில் வென்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் இருப்பார்கள். செய்யும் தொழிலில் வீழ்ச்சி அடைந்தாலும், மீண்டு(ம்), தான் யார் என்பதை காட்டுவார்கள். குறிப்பாக தன்னை ஏளனமாய் பார்த்தவர்கள் எதிரில், நின்று வென்று காட்டி கெத்து காட்டுவார்கள்.

உடல்நலம்

இவர்கள் உடல்நலத்தில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அக்கறைமின்மையுடன் இல்லாத காரணத்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் தாக்கி, அந்த நோயால் பெரும் அவதிக்கும், கஷ்டத்திற்கும் இவர்கள் உள்ளாவர்கள். சிலர் உயிருக்கு போராடும் நிலைக்கும் சென்றவர்களும் உண்டு. எனவே, இவர்கள் உடல் நலத்தில் மிகவும் அக்கறையுடன் இருப்பது நல்லது.

பிடிவாத குணம்

இவர்களுக்கு இந்த குணம் உள்ளது ஒரு விதத்தில் நன்மையாகவும், சில நேரங்களில் தீமையாகவும் அமைந்துவிடும். இந்த பிடிவாத குணத்தால் தாங்கள் முடிக்க வேண்டிய வேலைகளையும், முடிப்பார்கள். தாங்கள் கொண்ட கொள்கைகளிலும் அதேபோன்று இருப்பார்கள். இவர்களின் பிடிவாத குணம் சில நேரங்களில் தங்கள் குடும்பத்தாருக்கும், தங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இவர்களின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

கோபம் கொண்டவர்கள்

டிசம்பரில் பிறந்தவர்களை நன்றாக உற்று கவனித்தால் தெரியும். கோபம் அடிக்கடி வரும் என்று. அதுவும் சட்டென்று கோபம் வந்து, முகத்தில் அடித்தாற்போன்று பேசிவிடுவார்கள். அதன்பிறகு, இவர்களாகவே தாமாகவே முன்வந்து, அது சில நிமிடங்களில் நன்றாக பேசுவார்கள். கோபம் கொண்டு அதன்பிறகு சாந்தமடைந்தவர்களாக மாறிவிடுவார்கள் என்று இவர்களை நன்கு தெரிந்துவைத்தவர்கள், இவர்களின் கோபத்தை புரிந்துகொண்டு பழகுவார்கள்

உதவும் குணம் கொண்டவர்கள்

இவர்கள் மீது எந்த குறைசொன்னாலும், உதவுவதில் இவர்கள் வல்லவர்கள். அதுவும் கண்ணுக்கு தெரியாமல், கஷ்டப்படுபவர்களுக்கு, அவர்களுக்கும் தெரியாமல் உதவி செய்வார்கள். அதுவ்ம் நண்பர்களுக்கும் கஷ்டம் என்று தெரிந்தால் உதவி செய்வதில் தயங்கவே மாட்டார்கள். இந்த குணம் இவர்களுக்கு பிறப்பில் இருந்தே உள்ளது சிறப்பானது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close