தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!!

  அபிநயா   | Last Modified : 01 Dec, 2019 06:19 pm
tn-will-come-across-heavy-rain-for-next-2-days

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்கு, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் அதிகபடியான கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதியில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக சூறாவளி காற்று வீசும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 39 செ.மீ மழை பதிவாகியிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close