பிரியங்கா ரெட்டி படுகொலை : குற்றவாளிகளை கொண்டு செல்லும் வாகனத்தை தாக்கி இளைஞர்கள் ஆவேசம்!!

  அபிநயா   | Last Modified : 02 Dec, 2019 10:10 am
protest-for-priyanka-reddy-s-death

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொதுமக்களிடையே பரவலான குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தெலுங்கானாவில் பிரியங்கா ரெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளை கொண்டு சென்ற போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானாவில், அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி, கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் பழுதாகி பாதியில் நின்றது. அந்நேரத்தில், அவருக்கு உதவுவது போல அங்கு வந்த இளைஞர்கள் நால்வரும், அவரை பாலியல் கூட்டுவன்கொடுமைக்கு உட்படுத்தியதோடில்லாமல், கொடூரமான முறையில் கொலையும் செய்தனர்.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்ட போலீசார், குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து, அவரை கொடுரமான முறையில் கொலை செய்த குற்றவாளிகளை கொண்டு செல்லும் போலீஸ் வாகனத்தை தாக்கிய இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, தன் உயிரை கூடபொருட்படுத்தாத ஓர் இளைஞர் வாகனத்தின் முன்னால் படுத்து போராடுகிறார்.

இந்நிலையில், இந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close