திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக அடை மழை!!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 07:46 pm
trichy-hits-with-heavy-rain-from-morning

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜங்ஷன், ஸ்ரீரங்கம், பால் பண்ணை, சுப்ரமணியபுரம் பகுதிகளிலும் அதே போன்று மணப்பாறை வையம்பட்டி, துறையூர், லால்குடி, மணச்சநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. 

இதனால், தில்லைநகர் வடக்கூர் பகுதியில் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.  வீடு இடியும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த, சித்ரா, அவரது மகள் மற்றும் பேத்தி ஆகிய 3 பேரும் வெளியே ஓடிவந்து விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவெறும்பூர் பொய்கைகுடி வீடுகளில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close