செல்போன் சுவாரஸ்யத்தில் குழந்தையை மாடியில் இருந்து தவறவிட்ட தாய்... சிகிச்சை பலனின்றி பலி..

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 09:51 am
the-mother-who-missed-her-baby-on-the-2nd-floor-wall

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காக மாடிக்கு அழைத்து சென்ற தாய், செல்போனில் பேசியபடியே குழந்தையை தவறவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை அடுத்த நாராயணப்பதோட்டம், 7வது தெருவை சேர்ந்தவர் சையத் அபுதாகீ. இவரது மனைவி மும்தாஜ், நேற்று முன்தினம் 2வயதுடைய இளைய மகன் இர்பானுக்கு சாப்பாடு ஊட்டுவதற்காக 2வது மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். குழந்தையை மாடியின் ஓரத்தில் உள்ள சுற்று சுவரில் உட்கார வைத்து சோறு ஊட்டியுள்ளார். அப்போது, அவருக்கு போன் வந்துள்ளது. இதையடுத்து செல்போனில் பேசியபடியே குழந்தைக்கு சோறு ஊட்டியுள்ளார். 

அப்போது, இர்பான் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். அதிர்ச்சியடைந்த மும்தாஜ் கத்தி கூச்சலிட்டதை கேட்டு அக்கம், பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் இருந்த குழந்தையை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை இர்பான் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close