பிரபல சின்னத்திரை நடிகர் கைது.. கதறி அழுத மனைவி..!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 11:29 am
famous-actor-arrested

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் (34). இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடத்துள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகராக நடித்துள்ளார். தற்போது, சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ளார். 

ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து ஈஸ்வர் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஈஸ்வர் அவதிப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வாக்குவாதம் முற்றி ஜெயஸ்ரீயை ஈஸ்வர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெயஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்துள்ளனர். ஈஸ்வர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவியை அடித்ததாக சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் கைது செய்துப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close