பிரபல நடிகையுடன் கள்ளக்காதல்! பிரபல சீரியல் நடிகர் கைது!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 11:42 am
famous-actor-arrested

ராஜா ராணி சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு பிரபல நடிகையுடன் கள்ளக்காதல்.. மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார்...

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி, தேவதையை கண்டேன் போன்ற பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் (34). இவர், சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஜெயஸ்ரீ சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது கணவருக்கு வேறு ஒரு பிரபல நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும், தனது மகளையும் துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அவரின் தாயும் உடந்தை என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஈஸ்வரனையும் அவரது தாயையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தவறை ஒப்புக்கொண்டதாகவும், இதையடுத்து இருவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close