பேருந்து நடத்துனராக ரஜினி! வைரலாகும் புகைப்படம்!

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 10:30 am
super-star-rajinikanth-old-photo

நடிகர் ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியாதவரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சினிமா உலகில் பிரபலமானவர் ரஜினிகாந்த். இவர் இளம் வயதில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், சென்னை வந்து சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது, தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என சொல்லும் அளவிற்கு  உயர்ந்துள்ளார். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது தர்பார் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அவர் கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த  அரிய புகைப்படத்தின் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close