பிரபல மருத்துவமனையில் அரை மயக்கத்தில் இருந்த நோயாளி.. அத்துமீறிய ஆண் செவிலியர்!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 01:46 pm
the-nurse-who-mistreated-the-patient-who-was-half-unconscious

ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அரை மயக்கத்தில் இருந்த பெண் நோயாளியிடம் ஆண் செவிலியர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். 

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க மருத்து கொடுக்கப்பட்டதால் அந்த பெண் அரை மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் செவிலியர் ஒருவர் அவரின் ஆடைகளை களைந்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த பெண் அரை மயக்கத்தில் இருந்ததால்  தடுக்க முடியாமல் மனதளவில் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து மயக்கம் தெளிந்ததும் தனது கனவரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். இது குறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், அந்த ஆண் செவிலியரின் மேல் சட்டப்பிரிவு 354ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close