இரவு நேர விருந்தில் செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாரா!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 03:42 pm
actor-nayanthara-photos

இரவு நேர விருந்துக்கு செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழில் முன்னணி நடிகை என்ற இடத்தை நீண்ட காலமாக தக்கவைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் பல காதல் தோல்விகளினால் சர்ச்சைகளில் சிக்கினாலும், அதை கண்டு துவளாமல் தன் திறமையால் சினிமாவில் இன்னும் தனக்கான ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அனைத்து விழாக்களிலும் அவருடன் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும், படப்பிடிப்பு தளங்களிலும் நயன்தாராவுடன், விக்னேஷ் சிவனும் இருப்பார். இப்படி அனைத்து நிகழ்ச்சிகளில் இணைந்து செல்லும் காதல் ஜோடியான இவர்கள் அவ்வபோது வெளிநாடு செல்வதும் உண்டு. தற்போது தர்பார் படப்பிடிப்புகள் முடிவடைந்ததை அடுத்து, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நயன்தாரா அமெரிக்காவில் உள்ள தனது தோழிகள் கொடுத்த இரவு நேர விருந்தில் தனது காதலர் விக்னேஷுடன் கலந்து கொண்டார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close