உள்ளாட்சித் தேர்தலில் கலர் கலராய் வாக்குச்சீட்டு!  மிஷினுக்கு டாட்டா!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 04:05 pm
color-ballot-for-local-election

தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் வாக்குசீட்டு முறை தான் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தேர்தல் நடந்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பாக இந்த தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை பயன்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் குறித்த விவரத்தை காண்போம். வெள்ளை நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். இளம் சிவப்பு நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். பச்சை நிறத்திலும் வாக்குச்சீட்டு ஊராட்சி ஒன்றியவார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close