எனக்கு மானம் தான் முக்கியம்! எடப்பாடியை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்.!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 04:10 pm
stalin-vs-palanisamy

திமுக தலைவர் ஸ்டாலின் பதவிக்காக நான் சுயமரியாதை ஒருபோதும் இழக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஸ்டாலினும் நானும் ஒரே நேரத்தில் தான் அரசியலுக்கு வந்தோம். நான் குடும்ப அரசியலால் பதவிகள் பெறவில்லை, கஷ்டப்பட்டு தான் முதல்வர் பதவியை அடைந்தேன்." என்று கூறியிருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின், "மண் புழு போல ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை பிடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு அப்படி ஒரு பதவி தேவையே இல்லை. நான் 1989 ஆம் ஆண்டு ஆண்டுக்கு முன்பு இருந்தே அரசியலில் தான் இருக்கின்றேன். எடப்பாடி பழனிச்சாமி அப்போதெல்லாம் எங்கு இருந்தார் என்பதே தெரியாது. நான் மாணவனாக இருந்தபோதே அரசியலுக்கு வந்தவன்." என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, திமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களை முறையாக நிறைவேற்றிய பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் நோக்கம். நான் முதல்வர் கனவில் மிதப்பதாக எடப்பாடி கூறுகின்றார். பதவிக்காக நான் சுயமரியாதை ஒருபோதும் இழக்க மாட்டேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும், முதல்வரும் இப்படி வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவமானது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close