பெண் மருத்துவரை கொன்ற 4 பேரை தூக்கிலிடுங்கள், பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்லுங்கள்: நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2019 08:34 pm
hang-four-people-who-kill-female-doctor-beat-in-public-female-mps

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நான்கு பேரை தூக்கில் போட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்பி  விஜிலா சத்யானந்த் ஆவேசமாக பேசினார். இதேபோல், மாநிலங்களவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயபச்சான், அவர்களை மக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பெண் கால் நடை மருத்துவர் (27) பிரியங்கா ரெட்டி, நான்கு பேர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த நிலையில்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  

மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆவேசமாக பேசிய அதிமுக எம்பி  விஜிலா சத்யானந்த், ‘ பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நால்வரை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும். நாட்டில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை’ என்றார். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மா நிலங்களவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயபச்சான், ‘பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையான நபர்களை (குற்றம் சாட்டப்பட்டவர்களை) பகிரங்கமாக பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும்.’ என்று ஆவேசமாக பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close