கோவை வீடு விபத்து: உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டம்

  முத்து   | Last Modified : 02 Dec, 2019 06:31 pm
coimbatore-home-accident-struggle-to-arrest-owner

மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விபத்திற்கு காரணமான வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதி அருகே ஏ.டி காலனியில் இன்று அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் சிக்ஸ் கார்னர் பகுதியில் சாதிய அமைப்புகளை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் திடீரென மேட்டுப்பாளையம் உதகை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த சுவரை அப்புறப்படுத்தப் பல முறை கூறியும் அதனை அலட்சியப்படுத்தி விபத்தை ஏற்படுத்தி 17 உயிரைக் காவு வாங்கிய வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close