8 மாவட்டங்களில் கனமழை, 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு:மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2019 06:44 pm
heavy-rains-experienced-in-8-districts-and-heavy-rains-in-4-districts

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், ‘தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்  8 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;இடைவெளி விட்டு சேலசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும்’ என்றார்.

மேலும், மன்னார் வளைகுடா, குமரி கடற்பரப்பில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close