இன்று பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்: வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2019 07:50 pm
rajinikanth-celebrating-a-birthday-today

டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 69ஆவது பிறந்தநாள் வரவுள்ள நிலையில், ரஜினியின் நட்சத்திர பிறந்தநாள் இன்று அவரது வீட்டில் கொண்டாப்பட்டது.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 44 வருடங்களாக தமிழ் சினிமாவில் தான் தான் சூப்பர் ஸ்டார் என்றும், பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரஜினி நிரூபித்துகொண்டே இருக்கிறார்.

மேலும், ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் இன்று கட்டிவைத்துள்ளார். அப்பேற்பட்ட ரசிகர்கள் ரஜினிகாந்தின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். ஆதரவு அற்றோருக்கு அன்னதானம். ஏழைகளுக்கு உதவிகள் என்று ரஜினி பிறந்தநாள் தினத்தன்று ஆண்டுதோறும் செய்து வருவார்கள். டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் 69ஆவது பிறந்தநாள் தினத்தன்றும் இதுபோன்றவைகளை செய்ய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது வீட்டில்  நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார். அய்யர்கள் மந்திரங்கள் முழங்க ரஜினியின் நட்சத்திரத்தின் பெயரில் பூஜைகள் செய்தனர். இதையடுத்து, ரஜினி மற்றும் அவரது மனைவி லதாவிடம் குடும்ப உறுப்பினர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நட்சத்திர பிறந்தா நாள் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நட்சத்திர பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவர்..என்று அவரது தெரிவித்து வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close