பொதிகை , நெல்லை விரைவு ரயில்கள்: வரும் 4ஆம் தேதி முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து புறப்படும்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2019 09:58 pm
podhigai-and-nellai-express-trains-will-run-upto-chennai-egmore

பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் வரும் 4ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்படும் பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக, அக்டோபர் 9 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளகினர்.

இந்த நிலையில், பராமரிப்பு பணி முடிவடைந்ததால், பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் வரும் 4ஆம் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close