இன்று முதல் உயரும் மொபைல் பில்!

  அனிதா   | Last Modified : 03 Dec, 2019 09:00 am
voda-idea-mobile-call-data-charges-raised-up-to-42

இந்தியாவின் முக்கிய வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா இன்று முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது. 

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள இந்த நிதி ஆண்டிற்கான காலாண்டின் முடிவில், ரூ.50,921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள இந்நிறுவனம், இழப்புகளை சரி செய்வதற்காகவே தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்-ஐ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ் : 

காம்போ வவுச்சர்ஸ் (28 நாட்கள்) :

1. ரூ. 49 - ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 2.5 ப/நொடி டேரிஃப்.

2. ரூ. 79 - ரூ. 64 டாக் டைம், 200 எம்பி டேட்டா, 1 ப/நொடி டேரிஃப்.

வரம்பற்ற பேக்ஸ் (28 நாட்கள்) :

1. ரூ. 149 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.

2.  ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

3. ரூ. 299 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

4. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

வரம்பற்ற பேக்ஸ் (84 நாட்கள்) :

1. ரூ. 379 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), 6 ஜிபி டேட்டா, 1000 எஸ்எம்எஸ்.

2.  ரூ. 599 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

3. ரூ. 699 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

வரம்பற்ற வருடாந்திர பேக்ஸ் (365 நாட்கள்) :

1. ரூ. 1499 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), 24 ஜிபி டேட்டா, 3600 எஸ்எம்எஸ்.

2.  ரூ. 2399 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

முதல் ரீசார்ஜ் :

1. ரூ. 97 - ரூ. 45 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 28 நாட்கள்.

2.  ரூ. 197 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.

3. ரூ. 297 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

4. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.

இந்த புதிய வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டாங்களை, மை வோடபோன் ஆப், மை ஐடியா ஆப், www.vodofone.in, www.ideacellular.com, பே டிஎம், கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்றவற்றின் மூலம் செய்யலாம் எனவும், வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் இருந்து *121# என்ற எண்ணை டயல் செய்தும் இந்த திட்டங்களை பெறலாம் எனவும் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா அறிவித்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close