ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கவிழ்ந்து விழுந்த பேருந்து!

  அனிதா   | Last Modified : 03 Dec, 2019 11:26 am
bus-accident

உளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று உளுந்தூர் பேட்டை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தை ஓட்டி வந்த நகர்கோவிலை சேர்ந்த சத்தியராஜ் பாபு என்பவர் உளுந்தூர் பேட்டை டோல்கேட்டை தாண்டிய போது கண் அசந்துள்ளார். அப்போது பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் ஓட்டுநர் சத்யராஜூக்கு பின்புறம் இருந்த கண்ணாடி குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுள்ளது. மேலும் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். விபத்தை கண்ட பொதுமக்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து பேருந்தின் உள்ளே இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் கடந்த 10 நாட்களாக ஓய்வின்றி சபரிமலைக்குப் பேருந்தை ஓட்டி சென்றதாகவும் ஓய்வில்லாததால் கண் அசர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close