பெண் மருத்துவரை எரித்து கொன்ற குற்றவாளிகளுக்கு.. சிறையில் 'மட்டன்'

  அனிதா   | Last Modified : 03 Dec, 2019 01:28 pm
mataan-in-jail

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன், பருப்பு சாதம் உணவாக வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹைதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்களும், பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சிறைக்கு சென்ற முதல்நாள் இரவு குற்றவாளிகள் நால்வரும் தூங்கவில்லை என்றும், மதியம் அவர்களுக்கு உணவாக பருப்பு சாதமும், இரவில் மட்டன் உணவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், மட்டன் உணவாக வழங்கப்பட்ட தகவல் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் போலீஸ்க்கு கண்டனங்களை தெரிவிக்கும் வகையில்,  #HyderabadPolice என்னும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close