பட்டப்பகலில் 15 வயது சிறுமிக்கு ரயில் நிலையத்தில் அரங்கேறிய கொடுமை! 

  அனிதா   | Last Modified : 03 Dec, 2019 03:02 pm
sexual-abuse-of-a-15-year-old-girl

திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் 15 வயது சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.  

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் குழும அதிகாரிகளும் அண்ணா சதுக்கக போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று காண்காணித்த போது 15வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அவர் விருத்தாசலத்தை சேர்ந்த அன்பழகன் (25) என்பதும், 15வயது சிறுமியை பொது இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, அவரை 39 வயதுடையவர் திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்தது யார்? பாலியல் தொழிலில் சிறுமியை ஈடுபட வைத்தது யார்? என்பது குறித்து அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close