பேருந்தில் பயணிகளிடம் நடத்துனர் நடந்து கொண்ட விதம்: வைரல் வீடியோ

  முத்து   | Last Modified : 03 Dec, 2019 03:22 pm
tamilnadu-bus-conductor-give-instructions-to-passengers-viral-video

சென்னையில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனர் பயணிகளிடம் பேருந்து புறப்படும் முன்பு நல்விதமாக பேசி அவர்களுக்கு வாழ்த்துகள் கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் நடத்துனரிடம் பயனச்சீட்டு வாங்கும்பொழுது சில்லறை தொடர்பாக பல சண்டைகள் வந்திருப்பதை பார்த்துள்ளோம். அனைத்து நடத்துனர்களையும் இவ்வாறு கூறி விட முடியது. பணிச்சுமை காரணமாகவும் சில நடத்துனர்கள் பயணிகளிடம் கராராக நடந்து கொள்வது பார்க்கமுடிகிறது.

இந்த நிலையில், சென்னை to கோவை அரசு பேருந்தில் நடந்துனர் ஒருவர் பேருந்து புறப்படுவதற்கு முன்பு, பயணிகளிடம் பயணம், சுத்தம் பேருந்து வைத்துக்கொள்வதை குறித்து பேசியுள்ளார். பயணி ஒருவர் நடத்துனரின் பேச்சை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
அந்த வீடியோவில் பேசிய நடத்துனர், ‘பேருந்துகளில் பயணம் செய்யும் நாம் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். அரசு புதிய பேருந்துகளை பயணிகளை நம்பியும், பயணிகளின் போக்குவரத்துக்காகவும் கொடுத்துள்ளனர். பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால், பேருந்தை நிறுத்த சொன்னால் நிறுத்துகிறோம். பயணம் செய்யும் ஊரின் பேருந்து கட்டணத்தையும் தெளிவாக சொல்கிறோம். உங்கள் பயணம் நல்லபடியாக அமைய நடத்துனரான எனதும், ஓட்டுநருடைய வாழ்த்துகள்’ என்று கனிவான பேசினார்.

நடத்துனரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாவதை தொடர்ந்து, அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ட்விட்டரில் நடத்துனரை பாராட்டியுள்ளார்.


 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close