விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டுபிடித்தது எப்படி? சண்முக சுப்பிரமணியன் பேட்டி!

  முத்து   | Last Modified : 03 Dec, 2019 04:58 pm
how-to-find-the-part-of-vikram-lander-shanmukha-subramanian

நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், லேண்டரை கண்டுப்பிடித்தது எப்படி? என்று சண்முக சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சுப்பிரமணியன். நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன். சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில் லேண்டரை கண்டுப்பிடித்தது எப்படி? என்று சண்முக சுப்பிரமணியன் கூறுகையில், ‘ நாசா எடுத்த நிலவின் பழைய, புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்ததில் அதில் ஒரே ஒரு சிறிய புள்ளியை தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை என்று தெரிந்தது. அந்த புள்ளிதான் லேண்டரின் பாகங்களாக இருக்கும் என நினைத்து கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அந்த புகைப்படங்களை அனுப்பினேன். அதன் பிறகு எனது தகவல், அவர்கள் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த நாசா, எளிதாக விக்சரம் லேண்டரை கண்டுபிடித்தது’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close