ரூ.3,000 கோடி கறுப்பு பணம் சிக்கியது! வருமான வரி சோதனையில் அதிர்ச்சி!

  முத்து   | Last Modified : 09 Dec, 2019 03:56 pm
rs-3-000-crore-black-money-stuck-in-delhi

டெல்லியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு பிறகு ரூ.3,000 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சோதனை தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த வாரம் 25-க்கும் மேற்பட்ட சுரங்க மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது, கணக்கிடப்படாத ரூ.3.75 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கணக்கில் காட்டாத ரூ.3,000 கோடி கறுப்பு பணத்தை வைத்துகொண்டதாக ரியஸ் எஸ்டேட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது, அதற்காக வரி செலுத்தவும் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் பின்னர் 32 வங்கி லாக்கர்களும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு பிறகு இந்த அறிக்கையை தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) இந்த நிறுவனத்தை அடையாளம் காணவில்லை என்றாலும், அதிகாரிகள் ஓரியண்டல் இந்தியா குழு என்று கூறியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close