திருமணம் செய்வதாக கூறி பலமுறை உல்லாசம்....இதனால் கர்ப்பமான விதவை பெண்...! 

  முத்து   | Last Modified : 03 Dec, 2019 07:05 pm
stating-that-pregnant-widow-to-marry-the-girl-several-times

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி, விதவை பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள ஜங்கால்பட்டியை சேர்ந்த சிவக்குமாருடன் அதே  பகுதியைச் சேர்ந்த விதவைபெண் ராமுத்தாய் கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர்.  

இந்த நிலையில், வேலைக்கு சென்றபோது இருவரும் நெருங்கி பழங்க ஆரம்பிக்க, திருமணம் செய்துகொள்வதாக கூறி ராமுத்தாயிடம் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார் சிவக்குமார். இதனால், அப்பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த விவரம் வெளியில் தெரியவர, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் சிவக்குமாரிடம் அப்பெண் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, இதுதொடர்பாக அப்பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரிளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிவக்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 

newstm.in

    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close