சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு- பயணிகள் அவதி

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 08:25 am
affect-of-electric-train-service-in-chennai

தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 

சென்னையில் மக்கள் அதிகமாக மின்சார ரயில்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். விரைவாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்பதுதான் இதற்கான முதல் காரணம். சென்னை மற்றும் புறநகரில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படுகிறது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், இன்று காலை நுங்கம்பாக்கத்தில் இயந்திர கோளாறு காரணமாக மின்சார ரயில் தண்டவாளத்தில் பாதியிலேயே நின்றது. இதனால்  தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அடுத்தடுத்து வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close