தமிழருக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு மகுடம்.. ஆல்ஃபாபெட்டின் சிஇஓவாக சுந்தர் பிச்சை நியமனம்

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 10:17 am
sundar-pichai-appointed-as-ceo-of-alphabet

தமிழருக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு மகுடம்.. ஆல்பாபெட்டின் தலைமை செயல்அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது, கூகுள் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 5-ஆவது நிறுவனமாக கருதப்படும் இந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 

ஆல்பாபெட் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக இருந்த லாரி பேஜ்க்கு பதிலாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கூகுள் நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

— Sundar Pichai (@sundarpichai) December 4, 2019

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close