தர்பார் இசை வெளியீட்டு விழா! அதகளப்படுத்தும் ரஜினி ரசிகர்கள்!

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 05:34 pm
darbar-audio-lauch

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில், அனிரூத் இசையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகு நயன்தாரா ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்,  படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் படு உற்சாகமடைந்துள்ளனர். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close